சல்மான் கானை கொலை செய்யப் போகிறேன்: போன் மூலம் மர்ம நபர் மிரட்டல்
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யப் போவதாக ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து கூறியுள்ளார்.
கடந்த 16ம் தேதி மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் இருந்த நபர் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யப் போவதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

அந்த அழைப்பு எந்த இடத்தில் இருந்து வந்தது என்று போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்நிலையில் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பஜ்ரங்கி பாய்ஜான், பிரேம் ரத்தன் தன் பாயோ ஆகிய ஹிட் படங்களை அளித்துள்ள சல்மான் கான் தற்போது சுல்தான் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்து வருகிறார். அந்த படத்தில் அனுஷ்கா சர்மா ஹீரோயினாக நடிக்கிறார்.
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து சல்மான் கான் அலுவலகம் கருத்து தெரிவிக்கவில்லை.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications