சானா இக்பால் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்.. தாய் பரபரப்பு குற்றச்சாட்டு
ஹைதராபாத்: விபத்தில் பிரபல பெண் பைக் சாதனையாளர் சனா இக்பால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறினாலும், இது ஒரு கொலை என்று அவரது குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள்.
ஹைதராபாத் புற நகர் பகுதியில் கணவருடன் நேற்று அதிகாலை காரில் பயணித்தபோது, சாலை தடுப்பில் மோதி சானா இக்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவர் காயங்களோடு சிகிச்சை பெறுவதாகவும் போலீசார் தெரிிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

தாய் பேட்டி
இந்த நிலையில், சானாவின் தாயாரும், வழக்கறிஞருமான சஹீன் கான் கூறுகையில், சனாவின் திருமண வாழ்க்கை தொடர்ந்து தொல்லைக்குள்ளாகவே இருந்தது. ஆரம்பம் முதலே சானா மகிழ்ச்சியாக இல்லை.

குடும்ப வாழ்க்கை
குறுகிய காலமே கணவரோடு சானா வாழ்ந்தார். பிறகு, எங்கள் வீட்டில்தான் சானா வசித்தார். ஒருவரும் சானா மீது அக்கறை காட்டவில்லை. சானாவின் வாழ்க்கையில் தினமும் வேதனைதான்.

வருந்தி பேசினார்
சனிக்கிழமை கூட, இந்த நரகத்திலிருந்து தன்னை மீட்குமாறு சானா என்னிடம் தெரிவித்தார். ஆனால், நான் சென்னை சென்று கொண்டிருந்ததால், திரும்பி வந்ததும், சரி செய்கிறேன் என்று தெரிவித்திருந்தேன்.

விசாரணை தேவை
நான் சென்னை சென்ற நேரத்திற்குள்ளாக இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. விபத்து போல ஜோடிக்கப்பட்டு கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. காவல்துறை இதில் தக்க விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications