சானியாவுக்கு கேல் ரத்னா. தமிழகவீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு அர்ஜூனா விருது. பிரணாப் வழங்கி கவுரவிப்பு
டெல்லி : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருதும் தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு அர்ஜூனா விருது உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு மிக உயரிய விருதாக கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனையும், கடந்த ஜூன் மாதத்தில் நடந்த விம்பிள்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவருமான சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
தேர்வு குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட சானியா மிர்சாவுக்கு விருது வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜூனா விருதை வழங்கி பிரணாப் முகர்ஜி கவுரவித்தார்.
மேலும் 5 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும், 3 பேருக்கு தயான்சந்த் விருதையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications