டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கலாம்.. நம்பர் பிளேட்டில் தப்பு இருக்கலாமா... சானியாவுக்கு அபராதம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: போக்குவரத்து விதிகளை மீறியதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அபராதம் விதித்துள்ளனர் ஹைதராபாத் போலீசார்.
ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில் பகுதியில் நேற்றிரவு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் கார் அந்த வழியே வந்தது.

அதனை போலீசார் சோதனை செய்த போது, சானியாவின் கார் நம்பர் பிளேட் போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் தவறாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, சானியா மிர்சாவுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டதாக ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா தெலுங்கானாவின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications