சோலார் பேனல் ஊழல்: நடிகையுடன், மத்திய அமைச்சர், கேரள அமைச்சர்களுக்கு செக்ஸ் தொடர்பு இருந்ததாக புகார்
கொல்லம்: கேரளாவை பரபரப்பில் ஆழ்த்திய சூரிய சக்தித் தகடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான நடிகை சரிதா நாயருக்கும், முன்னாள் அமைச்சர் கே.பி.கணேஷ்குமார், மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால், கேரள அமைச்சர் ஏ.பி. அனில்குமார் ஆகியோருக்கு இடையே செக்ஸ் ரீதியான தொடர்புகள் இருந்ததாகவும், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிஜூ ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் ஜேக்கப் மேத்யூ கூறியுள்ளார்.
மேலும் குற்றப் பிரிவு ஐஜி அஜீத் குமாரும், சரிகாவை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கொல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த வீடியோ காட்சிகளை மீடியாக்களிடம் வெளியிடுவது தொடர்பாக எனது கட்சிக்காரர் பிஜூவிடம் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளேன். அது கிடைத்ததும் இந்த வீடியோ ஆதாரங்களை நான் வெளியிடுவேன்.

இந்த வீடியோவில், சரிதாவுடன் நான் சொன்ன நான்கு பேரும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றனர். தேக்கடியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வைத்து சரிதாவுடன் நான்கு பேரும் பாலியல் ரீதியான தொடர்புகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் டெல்லியில் உள்ள வேணுகோபாலின் நண்பர்கள் வீட்டிலும், கொச்சி போலீஸ் கமிஷனரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலும் வைத்து அட்டகாசம்
செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சிக்கியவுடன் பிஜூ கோவைக்கு தப்பிச் சென்றார். அப்படிப் போவதற்கு முன்பு இந்த வீடியோ காட்சிகளின் நகலை என்னிடம் அளித்திருந்தார். இப்போது இதை நான் வெளியிடக் கூடாது என்று போலீஸ் தரப்பில் என்னை மிரட்டி வருகின்றனர்.
வரும் நாளில் இந்த சதிச் செயல் மற்றும் பாலியல் வக்கிரங்களுக்குப் பின்னால் உள்ள மேலும் பலரின் பெயர்களும் வெளி வரும் என்றார் அவர்.
வேணுகோபால் மறுப்பு
இந்த புகார்களை வேணுகோபால் மறுத்துள்ளார். அதேபோல அனில்குமாரும் மறுத்துள்ளார். மேலும் மேத்யூ மற்றும் இதே புகாரை முன்பு கூறிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும், இந்தப் புகாரை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் சவால் விட்டுள்ளார். அதேபோல அஜீத்குமார், தான் மேத்யூ மீது வழக்குத் தொடரப் போவதாக கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications