சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல்- சென்னை வந்து சேர்ந்தார்!
5 நாட்கள் பரோல் கிடைத்த நிலையில் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார். இன்று இரவு சென்னை வந்து சேருகிறார் சசிகலா.
Recommended Video

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 5 நாட்கள் பரோல் கிடைத்த நிலையில் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா சென்னை வந்தடைந்தார். சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கணவர் நடராஜனை பார்க்க சசிகலா லீவ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து கடும் நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கொடுத்தது கர்நாடகா சிறைத்துறை.

அழைத்து வருகிறார் தினகரன்
பெங்களூரு சிறையில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு சசிகலா விடுவிக்கப்பட்டார். அவரை வேலூர் வழியாக காரில் சென்னைக்கு அழைத்து வருகிறார் தினகரன்.

ஆவணங்கள் சரியாக இல்லை
முன்னதாக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டிருந்தார். ஆனால் அவரது மனுவில் கணவர் நடராஜன் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் முறையாக இல்லை என கூறி நிராகரிக்கப்பட்டது.

தமிழக அரசின் சான்றிதழ்
பின்னர் மீண்டும் உரிய ஆவணங்களுடன் பரோல் கேட்டு விண்ணப்பித்தார் சசிகலா. அம்மனுவை ஏற்று தமிழக அரசிடம் தடையில்லா சான்றிதழை கோரியது கர்நாடகா சிறைத்துறை.

அக்.10 சிறைக்கு திரும்ப வேண்டும்.
தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில் சசிகலாவுக்கு 5 நாட்கள் மட்டும் பரோல் வழங்கியது கர்நாடகா சிறைத்துறை. வரும் 10-ந் தேதியன்று சசிகலா மீண்டும் பெங்களூரு சிறைக்கு திரும்ப வேண்டும்.

தி.நகரில் சசிகலா
பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக காரில் சென்னைக்கு வந்து சேர்ந்தார் சசிகலா. சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் சசிகலா தங்கியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications