பெங்களூரு சிறையில் சசிகலாவின் 'தோழி'யாக 'கொள்ளைக்காரி பமீலா'
கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்த சசிகலாவுக்கு தற்போது பெங்களூர் சிறையில் பமீலா என்ற கொள்ளைக்காரி புதிய தோழியாக கிடைத்துள்ளார்.
பெங்களூர்: கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்த சசிகலாவுக்கு தற்போது பெங்களூர் சிறையில் பமீலா என்ற சிறை கைதி புதிய தோழியாக கிடைத்துள்ளார்.
கடந்த 1982-களில் கடலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் பேச்சை வீடியோ எடுக்கும் ஒப்பந்தம் சசிகலா நடராஜனுக்கு வழங்கப்பட்டது. அதுமுதல் போயஸ் தோட்டத்துக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. அதன் பின்னர் 1991-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தார்.

நிழலாக மாறிய சசிகலா
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அவருடனேயே போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தார் சசிகலா. அவரது அக்காள் மகன் சுதாகரனை தத்து எடுத்துக் கொண்ட ஜெ. ஊரே மெச்சும் அளவுக்கு திருமணம் செய்து மக்களின் அதிருப்தியை பெற்றார். பின்னர் அடுத்து 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்தது.

ஜெ.இறப்பு
உடல்நல கோளாறு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை யாரும் சந்திக்க விடாமல் சசிகலா தடுப்புகளை ஏற்படுத்தினார். அதன் பின்னர் 75 நாள்கள் கழித்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடனேயே அவர் இருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இளவரசி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சிறைத் துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சசி மிகுந்த கவலை அடைந்துள்ளார்.

புதிய தோழி
கடந்த இரண்டரை மாதங்களில் வக்கீல்களை தவிர வேறு யாரும் வந்து சந்திக்க வில்லை என்ற கவலையில் உள்ள சசிகலா. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு இவர் தோழியாக இருந்தது போல் இவருக்கு தற்போது சிறையில் ஒரு தோழி கிடைத்துள்ளார். அவரது பெயர் பமீலா. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருவதுடன் அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications