சிறையை விட்டு வெளியே போய் ஷாப்பிங்.. 'தெனாவெட்டாக' திரும்பும் சசிகலா, இளவரசி- பரபர வீடியோ
பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா ஹாயாக வெளியில் சுற்றிவிட்டு சிறைக்கு திரும்பும் வீடியோ வெளியாகியுள்ளது.
பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வெளியில் சுற்றிவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலாவும் இளவரசியும் சிறைத்துறை அதிகாரி ஒருவரின் காரில் அவ்வப்போது ஊர் சுற்றி வருவதாக புகார் எழுந்தது. அதனை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து வந்தனர்.
இந்நிலையில் சிறை வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இது கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சுடிதாரில் வெளியே செல்லும் சசி
சசிகலா கைதிக்கான உடையை அணியாமல் நைட்டியுடன் வலம் வரும் வீடியோ வெளியானது. அந்த பீதி அடங்குவதற்குள் சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு திரும்பும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
இளவரசியும் செல்லும் வீடியோ
மேலும் தோளில் ஹேன்ட் பேக்கை மாட்டிக்கொண்டு ஒய்யாரமாக செல்லும் சசிகலாவின் பின்னால் இளவரசியும் செல்வது அந்த காட்சியில் தெரிகிறது. இதன்மூலம் சசிகலாவும் இளவரசியும் ஒரு கைதி போல சிறையில் நடத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

பெருந்தொகை செலவழிப்பு
மேலும் டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டுபோல் இந்த ஏகபோக வாழ்க்கையை சிறையில் அனுபவிக்க சசிகலா தரப்பு ஒரு பெருந்தொகையை செலவிட்டிருப்பதும் ஊர்ஜிதிமாகியுள்ளது.
Recommended Video


சசிகலா மாற்றம்?
சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் அளித்த சலுகைகள் அனைத்தும் ஆதாரப்பூர்மாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அரசின் மீதுள்ள நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்வதற்காக சசிகிலாவை விரைவில் வேறு சிறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications