பல லட்சத்துக்கு விலைபோன சசிகலா சிறை வீடியோ.. வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்றிய தாதாக்கள்! பரபர தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ, புகைப்பட‌ ஆதாரங்களை மீடியாக்களுக்கு சிலர் விலைக்கு விற்றது அம்பலமாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி சிறைத் துறை டிஐஜி ரூபா மாநில உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், "சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர்" என்றும் குற்றம் சாட்டினார்.

சேனலில் வெளியானது

சேனலில் வெளியானது

இந்த குற்றச்சாட்டு கடிதம், கன்னட டிவி சேனலில் அன்று இரவே வெளியாகி நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. மீடியாக்களுக்கு விஷயம் கசிந்ததை வைத்து ரூபா மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசுக்கு பதிலளிக்கும் முன்பே, அவர் போக்குவரத்து துறை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

டிமாண்ட் அதிகம்

டிமாண்ட் அதிகம்

இதனிடையே கடந்த 17ம் தேதி சசிகலாவின் சிறை அறை களின் புகைப்படங்கள், சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரஜா டிவியில் காட்டப்பட்டது. இதனிடையே சிறையில் கசியும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஊடக வட்டாரத்தில் உருவானது. கர்நாடக, தமிழக அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வீடியோக்கள் என்பதால் சில அரசியல் கட்சிகளும் பேரத்தில் இறங்கியுள்ளன.

ரூ.2 லட்சமாம்

ரூ.2 லட்சமாம்

இதனிடையே சிறையில் சசிகலா சீருடை அணியாமல் நைட்டி அணிந்துகொண்டு நடமாடும் காட்சிகள் பதிவாகிய 2 நிமிட வீடியோவை ரூ.2 லட்சம் கொடுத்து ஒரு கன்னட சேனல் வாங்கி ஒளிபரப்பியதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூர் சிறையில் இருக்கும் முக்கிய தாதாக்கள், அவர்களின் அடியாட்கள் நடுவே கோஷ்டி பூசல் உள்ளது. எதிர்தரப்புக்கு சிறை அதிகாரிகள் கரிசனம் காட்டும்போதெல்லாம், எதிர்தரப்பு அதற்கான ஆதாரங்களை திரட்டும். அப்படி திரட்டிய வீடியோ காட்சிகள்தான் இவையாம்.

தாதாக்கள் சாம்ராஜ்யம்

தாதாக்கள் சாம்ராஜ்யம்

சிறையிலுள்ள ஒரு தாதாவின் அடியாட்களிடம் வீடியோ இருப்பதை அறிந்த சில ஊடகங்கள் அவரிடம் பேரம் பேசியுள்ளன. ஒரு தனியார் சேனல் ரூ.5 லட்சம் கொடுத்து வீடியோவை வாங்கியபோது அவர் கேரியரை உள்ளே கொண்டு செலும் காட்சிகள் இருந்தன. அதேபோல 5 நிமிடங்கள் ஓடும் ஒரு வீடியோவில் சசிகலா மற்றும் இளவரசி ஷாப்பிங் செல்லும் காட்சிகள் வெளியாகின. அந்த வீடியோவுக்கு விலை ரூ.10 லட்சமாம்.

பணத் தொழில்

பணத் தொழில்

சசிகலா வீடியோவுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால், சிறையிலுள்ள ரவுடிகளுக்கு அவர்களின் தலைமை தாதாக்கள் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனராம். அதன்படி சசிகலா, இளவரசி தொடர்பான காட்சிகளை செல்போனில் சுட்டுத் தள்ளுங்கள். இப்போது, இதுதான் வருமானம் கொழிக்கும் தொழில் என்பதுதான் அந்த உத்தரவாம். எனவே இனிமேல் சசிகலா சிறைக்குள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பதே உண்மை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala jail videos on demand, says sources as many videos wait to hit the media market.
Please Wait while comments are loading...