சோனியா, ராகுலை சந்திக்க காத்திருக்கும் சசிகலா புஷ்பா....
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து தமக்கு ராஜ்யசபாவில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்க இருக்கிறார் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா.
அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா தம்மை அடித்தார்; எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மிரட்டினார் என ராஜ்யசபாவில் நேற்று அதிரடியாக புகாரை கண்ணீர்மல்க கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இந்த புகாருக்கு அதிமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். சசிகலா புஷ்பாவை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த புகாரைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா உடனே டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிம் பேசிய சசிகலா புஷ்பா, தமக்கு ராஜ்யசபாவில் ஆதரவு தெரிவித்த திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனிடையே சோனியா, ராகுல் ஆகியோரை சந்திக்க சசிகலா புஷ்பா நேரம் கேட்டிருக்கிறார். இருவரையும் நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்க இருக்கிறாராம் சசிகலா புஷ்பா.












Click it and Unblock the Notifications