அநியாயமா இப்படி பண்ணிட்டீங்களே.. சசிகலாவை சபித்து சிறையில் குவியும் கடிதங்கள்!
பெங்களூர்: சசிகலாவை சபித்து மக்கள் பலரும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கே கடிதங்கள் எழுதி அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என குற்றம்சாட்டி இதுபோன்ற கடிதங்கள் வந்து குவிகின்றன என்கிறது பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வட்டாரங்கள்.
'Sasikala, Central Prison, Parappana Agrahara, Bangalore 560100' என்ற முகவரிக்கு இதுவரை சுமார் 100 கடிதங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்துள்ளனவாம்.

குற்றச்சாட்டு
பெரும்பாலான கடிதங்கள் ஜெயலலிதா மரணத்தோடு சசிகலாவை தொடர்புபடுத்தி வருகின்றனவாம். இது ஒரு திட்டமிட்ட கொலை என்று கடிதங்கள் பலவற்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாம்.

புறமுதுகு
"நீங்கள் எங்கள் தலைவியை கொலை செய்துவிட்டீர்கள். புறமுதுகில் குத்திவிட்டீர்கள். உங்களுக்கு வாழ்க்கையையும், எல்லாவற்றையும் கொடுத்தவரை கொன்றுவிட்டீர்கள். உங்கள் கெட்ட செயலுக்காக வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவீர்கள்" என ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கொஞ்சம், கொஞ்சமாக
"செய்த தப்புக்கு இஞ்ச், இஞ்ச்சாக கஷ்டப்படுவீர்கள்" என்று ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாசிப்பதே இல்லை
ஆரம்ப காலங்களில் சசிகலா தனக்கு வரும் அனைத்து கடிதங்களையும் வாசிப்பாராம். ஏச்சு, பேச்சு அதிகரித்ததால் இப்போது இளவரசி படித்து பார்த்துவிட்டு கொடுக்கும் கடிதங்களை மட்டுமே படிக்கிறார் என்றும் சிறைத்துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications