கணவர் நடராஜனை பார்க்க சசிகலாவுக்கு இதுவரை பரோல் மனு தாக்கல் செய்யப்படவில்லை- வழக்கறிஞர்
கணவர் நடராஜனை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு இதுவரை பரோல் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
பெங்களூர்: கவலைக்கிடமான வகையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு இதுவரை பரோல் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று வழக்கறிஞர் அசோகன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதையடுத்து உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருகிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கணவரை பார்க்க சசிகலா இன்று பரோல் கேட்டு மனு தாக்கல் செய்ததாகவும் அவருக்கு சிறை துறை பரோல் வழங்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பரோல் குறித்து சசிகலா தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து வழக்கறிஞர் அசோகன் கூறுகையில் சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாளில் மனு தாக்கல் செய்யப்படும்.
பரோல் பெறுவதில் சட்ட சிக்கல் உள்ளன. அவற்றை ஆலோசனை செய்து பரோல் மனு தாக்கல் செய்யப்படும்.
சிறைத் துறை அதிகாரிகளிடம் பரோல் குறித்து பேசி வருகிறோம். சசிகலா சார்பில் பரோல் கோரி தற்போது வரை மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றார் அசோகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications