For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா என்ன நாட்டுக்காக போராடிய தியாகியா.. கர்நாடக சிறை டிஜிபி காட்டம்!

சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை என பெங்களுரூ சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. அவர் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவார் என பெங்களூரு சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தது. 3 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.

இதைத்தொடர்டந்து கடந்த 15ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவருக்கு சிறையில் சில சிறப்பு சலுகைள் அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனை பெங்களூரு சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

சசிக்கு ஸ்பேஷல் சாப்பாடு இல்லை

சசிக்கு ஸ்பேஷல் சாப்பாடு இல்லை

"சசிகலாவுக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுதான் வழங்கப்படுகிறது. மற்ற கைதிகளுக்கு எந்தநேரத்தில் உணவு வழங்கப்படுகிறதோ அதே நேரத்தில் தான் சசிகலாவுக்கும் உணவு வழங்கப்படுகிறது.

சசிகலாவும் குற்றவாளிதான்

சசிகலாவும் குற்றவாளிதான்

அவர் நன்றாக இருக்கிறார். மிகவும் அமைதியாக காணப்படுகிறார். இங்கு எல்லா கைதிகளும் குற்றவாளிகள் தான். யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை.

சிக்கன், மட்டனும் உண்டாம்

சிக்கன், மட்டனும் உண்டாம்

தினமும் காலையில் புளிசாதம், உப்புமா, அவல்சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவையும், மதியம் கேழ்வரகு களி, சோறு, சப்பாத்தி, இரவில் சப்பாத்தி,களி ஆகியவை வழங்கப்படுகின்றன. வாரம் ஒருமுறை மட்டனும்,சிக்கனும் வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறை டீ, காபியும் வழங்கப்படுகிறது.

மற்ற கைதிகள் போலதான் சசிக்கும்

மற்ற கைதிகள் போலதான் சசிக்கும்

பெங்களூர் மத்திய சிறையை பொறுத்தவரை ‘ஏ' கிளாஸ், ‘பி' கிளாஸ் என எந்த வித்தியாசமும் இல்லை. சசிகலாவுக்கு எந்த சிறப்பு அறையும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போல சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது.

தரையில்தான் தூக்கம்.. 2 போர்வை

தரையில்தான் தூக்கம்.. 2 போர்வை

சசிகலா தரையில்தான் படுத்து தூங்குகிறார். குளிர் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 2 போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன. கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மற்ற கைதியுடன் தங்க வைக்கப்படுவார்கள்.

இளவரசி மட்டும் தங்கியுள்ளார்

இளவரசி மட்டும் தங்கியுள்ளார்

சசிகலா கேட்டுக் கொண்டதால் அவருடன் இளவரசி மட்டும் தங்கியுள்ளார்.பெங்களூர் சிறையில் 200க்கும் குறைவான பெண் கைதிகளே இருக்கிறார்கள். பாதுகாப்புக்காக 3 பெண் கண்காணிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

மற்ற கைதிகளால் அச்சம் இல்லை

மற்ற கைதிகளால் அச்சம் இல்லை

ஏதேனும் பிரச்சினை இருந்தால் அவர்களிடம் தெரிவிக்குமாறு சொல்லி இருக்கிறேன். மற்ற கைதிகள் மூலம் சசிகலாவுக்கு ஆபத்து என்பதெல்லாம் தேவையற்ற அச்சம். குற்றவழக்கில் தண்டனை பெற்றதாலே சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

சசிகலா ஒன்றும் தியாகி இல்லை

சசிகலா ஒன்றும் தியாகி இல்லை

அவர் நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. எல்லோருக்கும் வழங்கப்படுவதை போலவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கைதி விரும்பினால் ஒரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும்.

எந்த சிறைக்கு வேண்டுமானாலும் போகலாம்

எந்த சிறைக்கு வேண்டுமானாலும் போகலாம்

அதற்கு கோர்ட்டும் சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். சசிகலா தேவைப்பட்டால் தன்னை எந்த சிறைக்கு வேண்டு மானாலும் மாற்ற கோரலாம். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை.

ஜெயிலில் எந்த வேலையும் செய்யல

ஜெயிலில் எந்த வேலையும் செய்யல

ஜெயிலில் சசிகலா எந்த வேலையும் செய்யவில்லை. தேவைப்பட்டால் விரும்பும் வேலையை செய்யலாம். அதற்காக பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் தெரிவித்தார்.

English summary
Bangalore prison DGP Sathiya Narayanarao said that Sasikala was not fighting for the nation and come to jail. He said that Sasikaka has been treated as other prisoners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X