வீடியோ கான்பிரன்சிங்கனா வெள்ளை ஆடை... ஷாப்பிங் போக சல்வார் கமீஸ்- சசி ஸ்டைல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான போது வெள்ளை நிற சிறை கைதி ஆடை அணித்திருந்த சசிகலா அன்னியன் மாதிரி அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடையை மாற்றியிருப்பது அம்பலமாகி உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக டிஐஜி ரூபா அம்பலப்படுத்தினாா். மேலும் சிறைத் துறை அதிகாரியின் காரிலேயே அவர் பலமுறை சிறையை விட்டு வெளியே சென்று வந்துள்ளார் என்று தெரிகிறது.

Sasikala wore Salwar kamees and went for shopping

இந்நிலையில் சிறையிலிருந்து சல்வார் கமீஸில் அண்ணி இளவரசியுடன் சாவகாசமாக ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சசிகலா நைட்டியில் உலா வரும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. பெரா வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடத்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் தோன்றிய சசிகலா கைதிகளுக்கான வெள்ளை உடையில் இருந்தார் என்று தகவல்கள் வெளியானது.

Pon RadhaKrishnan Speech About Sasikala-Oneindia Tamil

சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் விதவிதமான ஆடைகளை அணிந்து சிறையையே ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Video which was released that shows that Sasikala dressed as per situation.
Please Wait while comments are loading...