அம்மாடியோவ்.. குஜராத்தையே விழுங்கும் அளவுக்கு.. பைபர்ஜாய் கரையை கடக்கும் முன் எடுத்த சேட்டிலைட் படம்
அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையைக் கடந்து வரும் பைபர்ஜாய் புயல், கரையைக் கடக்கும் முன்பாக சில மணி நேரங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட செயற்கை கோள் படம் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக உருமாறியது. 'பைபர்ஜாய்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. மிக தீவிர புயலான இந்த பைபர்ஜாய் புயல் இன்று மாலை 6.30 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கியது.

புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையைக் கடக்க தொடங்கியதில் இருந்து பலத்த காற்று வீசி வருகிறது. புயல் முழுவதுமாக கரையைக் கடக்க நள்ளிரவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் மையப்பகுதி கரையை நெருங்கும் போது மணிக்கு 125- 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதே புயல் காற்றினால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. அரபிக் கடலில் நீண்ட நாள்கள் நிலை கொண்டிருந்த இந்த புயலாக பைபர்ஜாய் உள்ளது. இந்த புயல் கிட்தடட்ட 10 நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து இன்று மிக தீவிர புயலாக கரையைக் கடந்து வருகிறது. இதனிடையே புயல் கரையைக் கடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட செயற்கை கோள் படம் வெளியாகியுள்ளது.

INSAT - செயற்கை கோள் வெளியிட்ட அந்த படத்தில், பைபர்ஜாய் புயலின் சுழல் மற்றும் அதன் காற்று மண்டலம் ஒட்டு மொத்த குஜரத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு பெரிதாக புயலின் மொத்தபகுதியூம் இருப்பதை காட்டுவதாக உள்ளது. நாட்டிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் குஜராத் ஆகும். குஜராத்தை பொறுத்தவரை 196,000 km² பரப்பளவு கொண்டது. செயற்கை கோள் படத்தில் இவ்வளவு பெரிய மாநிலமான குஜரத்தை விட பெரிதாக பைபர்ஜாய் தென்படுகிறது. முன்னதாக நேற்று எடுக்கப்பட்ட படத்தில் இதை விட பெரிதாக பைபர்ஜாய் புயல் இருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications