ரைசிங் ஸ்டார் ராகுல் காந்தி .... மீண்டும் சர்ச்சையில் சத்ருகன் சின்கா
டெல்லி: பீகார் முதல்வராக பதவியேற்கவிருக்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் சத்ருகன் சிங்கா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை 'ரைசிங் ஸ்டார்' என்று புகழாரம் சூட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாட்னாவில் குவிந்துள்ளனர்.

நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழா பாட்னா நகரின் காந்தி மைதானத்தில் இன்னும் சில நிமிடங்களில் துவங்க உள்ளது. விழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான நடிகர் சத்ருகன் சின்கா, நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி கட்சியின் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவுக்கும், ராகுல் காந்திக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
" இன்று முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமார் அவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களான லாலு பிரசாத் அவர்களுக்கும், ரைசிங் ஸ்டார் ராகுல் காந்தி அவர்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்ருகன் சின்கா பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார். தேர்தல் முடிந்த பிறகும் கட்சியை அவர் தீவிரமாக தாக்கிப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications