டியர் ஊழியர்களே, உங்கள் சி.இ.ஓ. எழுதுகிறேன்: சத்யா நாதெல்லாவின் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சான் பிரான்சிஸ்கோ: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சிஇஓவான சத்யா நாதெல்லா ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு நான் மைக்ரோசாப்ட்டில் சேர்ந்த நாளை நினைவுபடுத்துகிறது. உலகிலேயே சிறந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் என்பதால் தான் நான் பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் இங்கு வந்தேன். இதை விட சிறந்த நிறுவனம் இல்லை என்று எனக்கு தெரிந்ததால் தான் இங்கு வந்தேன்.

Satya Nadella's letter to Microsoft employees

நான் ஸ்டீவ் மற்றும் பில்லுடன் வேலை பார்க்க கொடுத்து வைத்துள்ளேன். நான் சிஇஓவாக பொறுப்பேற்கும் இந்நேரம் நிறுவனம், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குமாறு பில்லை கேட்டுக் கொள்கிறேன். நம் நிறுவனம் பாரம்பரியத்தை அல்ல புதுமைகளை மதிக்கும் நிறுவனம். இது மைக்ரோசாப்டுக்கு சற்று சிக்கலான நேரம். மொபைல் மற்றும் க்ளவுட் பர்ஸ்ட் உலகில் நாம் சிறந்து விளங்க வேண்டும்.

நாம் ஒன்றாக சேர்ந்து புதிய பயணத்தை துவங்கும் வேளையில் நான் யார் என்ற விவரங்களை உங்களுடன் பகிரந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு 46 வயதாகிறது. எனக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். எனக்கு புதிதாக கற்றுக் கொள்ளுதல் மீது ஒரு வேட்கை உள்ளது. தொழில்நுட்பம் மூலம் உலகை மாற்றவே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பலர் சேர்ந்தது போன்று நானும் சேர்ந்தேன்.

இது சாப்ட்வேர் ஆதிக்கமுள்ள உலகம். ஒவ்வொரு வீட்டிலும், மேஜையிலும் ஒரு பி.சி இருக்க வேண்டும் என்பது நம்முடைய இலக்காக இருந்தது. தற்போது நாம் பலவகைப்பட்ட சாதனங்களில் கவனம் செலுத்த வேண்டும். நோக்கியா டிவைசஸை நம் குடும்பத்திற்கு வரவேற்போம்.

இந்த உலகிற்கு மைக்ரோசாப்ட் வித்தியாசமாக என்ன அளிக்கப்போகிறது என்று பார்க்க வேண்டும். முடியாதவற்றையும் செய்ய முயல வேண்டும். புதியவைகளை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இது வெறும் வேலை அல்ல பிற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது என்பதை உணர்ந்தால் அது சிறந்த பணியாக இருக்கும்.

பல நிறுவனங்கள் உலகை மாற்ற விரும்புகின்றன. ஆனால் அதற்கு தேவையான திறமை, ஆட்கள் மற்றும் விடாமுயற்சி சிலரிடமே உள்ளது. மைக்ரோசாப்ட் தன்னிடம் இந்த மூன்றும் நிறைய உள்ளன என்பதை நிரூபித்துள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+