சத்யஜித்ரேயின் மனைவி பிஜோயா ரே காலமானார்- மம்தா நேரில் அஞ்சலி
கோல்கட்டா: உலகப்புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரேயின் மனைவி பிஜோயா ரே காலமானார். அன்னாருக்கு வயது 98.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே. இவரது திரைப்படங்கள் காலத்தால் அழியாத புகழ் பெற்றவை. ஆஸ்கார், பாரதரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற சத்யஜித்ரேயின் மனைவி பிஜோயா ரே.

1917-ம் ஆண்டு பிறந்த பிஜோயா, 1948-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி சத்யஜித்ரேயை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு சந்தீப் ரே என்ற மகன் உள்ளார். இவரும் மேற்கு வங்க மாநிலத்தில் புகழ் பெற்ற இயக்குநர் ஆவார்.
கடந்த 1992ம் ஆண்டு சத்யஜித்ரே காலமானார். அதனைத் தொடர்ந்து மகனுடன் வசித்து வந்தார் பிஜோயா. இவர் முதுமை காரணமாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த பிஜோயா, சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். மறைந்த பிஜோயா சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜோயாவின் மரணச் செய்தி கேள்விப்பட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனைக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications