சடங்கு, ஆடைகள் மீது ஈர்ப்பு.. இந்து முறைப்படி திருமணம் செய்த அரேபிய வாலிபர்-ரஷ்ய பெண்மணி!
காந்திநகர்: சவுதி அரேபியாவை சேர்ந்த இஸ்லாமியரும், ரஷ்ய பெண்மணியும், இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த, ஹமித் அல் ஹமத் சீனாவில் சாப்ட்வேர் இன்ஜீனியராக பணியாற்றி வரும் நிலையில், ரஷ்யாவை சேர்ந்த ஜூலியனா சிமிர்னோப் என்ற சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் கிஷான் தோலியா என்ற இந்தியர், சீனாவிற்கு உயர் படிப்பு படிக்க சென்றார் அபோது ஹமித் மற்றும் ஜூலியானவுடன் நட்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து கிஷான் இந்தியாவில் நடைபெறும் தனது திருமணத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார். கிஷானின் திருமணத்தில் காதலர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பாரம்பரிய இந்து மத சடங்குகளையும், அவர்களது ஆடை அலங்காரங்களையும் பார்த்து காதலர்கள் ஆச்சரியபட்டனர். இந்நிலையில், ஹமிதும், ஜூலியானாவும், இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளனர். இதற்காக அவர்கள் கிஷான் உதவியை நாடினர். கிஷானும் அவரது நண்பர்களும் சேர்ந்து காதலர் இருவருக்கும் இந்துமத முறைப்படி நேற்று திருமணம் செய்து வைத்தனர்.
இதற்கான உடைகளும் நகைகளும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.இந்து பாரம்பரிய படி ஜூலியான சேலை அணிந்தார். ஹமித் ஷெர்வானி அணிந்தார். இந்த திருமணம் சூரத்தில் உள்ள வர்ஜா பகுதியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கிஷானின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்திய கலாச்சாரம் மற்றும் அவரது சடங்குகள் எங்களை மிகவும் கவர்ந்தது. இத்தகைய பாரம்பரிய மதிப்புகளை புறக்கணிக்க முடியாது. இது பல ஆண்டுகள் பழமையானது. நானும் ஜூலியனாவும் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என உடனடியாக முடிவு எடுத்தோம் எனக்கூறினார்.












Click it and Unblock the Notifications