காவிரி நதிநீர் வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜூலை 19-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: காவிரி நதிநீர் தொடர்பான அனைத்து வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களிடையே காவிரி நதிநீரை பகிர்வதில் பிரச்சனை நீடித்து வந்ததைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு, காவிரி நதியில் இருந்து கிடைக்கும் மொத்த நீர் அளவு 740 டிஎம்சி ஆகும். இதில் கேரளத்துக்கு 30 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என மொத்தம் 726 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்து தீர்ப்பளித்தது.

ஆனால் இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஒருபோதும் நடைமுறைப்படுத்தியதே இல்லை. இதனிடையே 2013-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது.
இருப்பினும் கர்நாடகா, தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிடாமல் வஞ்சித்தே வருகிறது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு வழக்குகளை தொடர்ந்தது.
காவிரியில் உரிய நீரைத் திறந்துவிடாத கர்நாடகா ரூ2,500 கோடி நட்ட ஈடு தர வேண்டும் என்றும் ஒரு வழக்குப் போட்டது தமிழக அரசு.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையிலான ஆர்.கே அகர்வார், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இன்று விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கின் விசாரணை ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அன்றைய தினம் முதல் அனைத்து வழக்குகள் மீது விரிவான விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications