அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத் தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: நாடு முழுவதும் அகில இந்திய மருத்துவபடிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ளது.
அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு நடத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம் 2013-ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் ஆகியவை சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தன. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடாளுமன்றத்திலும் மத்திய அரசின் சீராய்வு மனுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று மருத்துவ படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளது. அத்துடன் 2013-ம் ஆண்டு பொதுநுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மருத்துவ படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால் தமிழகத்தில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வரும் 69% இடஒதுக்கீட்டு முறை கேள்விக்குறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications