For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமித்ஷா வழக்கறிஞர் யு.யு. லலித்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் யு.யு. லலித்தை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க நீதிபதிகள் நியமன குழு பரிந்துரை செய்துள்ளது.

SC collegium sends UU Lalit's name for appointment as SC judge

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதி பதவிக்கு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தின் பெயரை நீதிபதிகள் நியமன குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால் மத்திய அரசு அவரது பெயரை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா மிகக் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரமான அமித்ஷாவுக்கு எதிரான வழக்குகளில் அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் யு.யு. லலித்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க நீதிபதிகள் நியமன குழு பரிந்துரை செய்துள்ளது.

அமித்ஷாவுக்கு எதிரான சோராபுதின் ஷேக் என்கவுண்டர் மற்றும் துளசிராம் பிரஜாபதி என்கவுண்டர் வழக்கு ஆகியவற்றில் அவருக்கு ஆதரவாக வாதாடியவர் யு.யு. .லலித் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Cout collegium sends Amithsha's lawyer UU Lalit's name to govt for appointment as SC judge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X