நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் டிஸ்மிஸ்!!
டெல்லி: நாட்டை உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கில் இளம் குற்றவாளியை விடுதலை செய்ததை எதிர்த்து டெல்லி மகளிர் ஆணையம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டெல்லியில் மருத்துவ மாணவி 'நிர்பயா' 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு பேருந்தில் வெளியே வீசப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் சிகிச்சை பலனின்றி 'நிர்பயா' உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.
எஞ்சிய குற்றவாளிகளில் ஒருவருக்கு 17 வயதுதான் ஆகி இருந்தது. இதனால் அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிறார் குற்றவாளிகள் சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்படி சிறார் சீர்திருத்த பள்ளியில் இளம் குற்றவாளி அடைக்கப்பட்டிருந்தார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டார். அவரது விடுதலைக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையம், இளம் குற்றவாளி விடுதலைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இதை இன்று விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டெல்லி மகளிர் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது, இளம் குற்றவாளியின் தண்டனையை நீடிக்க சட்டத்தில் இடமில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எங்களுக்கும் கவலைதான்...ஆனால்
இதை இன்று விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அப்போது, சிறார் சீர்திருத்த சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட தண்டனை முடிந்த பிறகும் ஒருவரது சுதந்திரத்தை கட்டுப்படுத்த சட்டத்தில் இடமில்லை. அதாவது இளம் குற்றவாளியின் தண்டனையை நீடிக்க சட்டத்தில் இடமில்லை.
மேலும் இளம் குற்றவாளியின் விடுதலை எங்களுக்கும் கவலை தருகிறது. ஆனால் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என த்ரிவித்தது.












Click it and Unblock the Notifications