பிசிசிஐ விதிகளை "பட்டி டிங்கரிங்" பார்க்க 3 நபர் குழு அமைப்பு!
டெல்லி: ஓட்டை உடைசலான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளையும், சட்டத் திருத்தங்களையும் மறு ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது கிரிக்கெட் வாரியத்தை ஒட்டுமொத்தமாக நிலை குலைய வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், தற்போது உள்ள பிசிசிஐ சட்ட விதிகள் பெரும்பாலும், சட்டத்தின் பிடியிலிருந்தும், அரசின் பிடியிலிருந்தும், ஆர்டிஐ வரம்புக்குள் சிக்காத வகையிலும் மிகவும் சுயநலனுடன் கூடியதாக, மக்கள் விரோத விதிகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அரசுக்கும், சட்டத்திற்கும், மக்களுக்கும் கட்டுப்பட்டது கிரிக்கெட் வாரியம். அது சட்ட வரம்புக்குள் வராதது அல்ல என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக இன்று கூறி விட்டது.
மேலும் வாரியத்தின் அத்தனை விதிகள், சட்ட திட்டங்கள், திருத்தங்கள மறு ஆய்வு செய்து பரிந்துரை அளிக்குமாறு 3 நபர் கமிட்டியை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தக் கமிட்டியின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பான், ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோரை பெஞ்ச் அறிவித்துள்ளது.
இந்தக் கமிட்டி இன்றிலிருந்து 6 மாதத்திற்குள் ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டிடம் பரிந்துரைகளை அளிக்கும்.
வாரியத்தின் சட்டவிதிகள், தேவையில்லாதது, சட்டவிரோதமானது என்று எது இருந்தாலும் அதுகுறித்து மறு ஆய்வு செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை நீதிபதிகள் பிறப்பிக்கும்போது பிசிசிஐ ஒரு சொசைட்டி என்று அதன் வக்கீல்கள் சார்பில் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், சொசைட்டியாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று கூறி விட்டனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications