கெயில் வழக்கு: தமிழக அரசின் சீராய்வு மனு மீது மார்ச் 1-ல் விசாரணை
டெல்லி: விளைநிலங்கள் வழியே கெயில் எரிவாயு குழாய்களை பதிக்க உச்சநீதிமன்றன் அனுமதித்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீது மார்ச் 1-ந் தேதியன்று விசாரணை நடைபெற உள்ளது.
கெயில் எரிவாயு குழாய்களை தமிழகத்தின் 7 மேற்கு மாவட்டங்களில் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் இத்திட்டத்துக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் மத்திய அரசின் கெயில் எரிவாயு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய் அமைக்க அனுமதி அளித்து கடந்த 2-ந் தேதி தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பு தமிழக விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அதேபோல் தேமுதிக, விவசாயிகள் சங்கமும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தன.
இந்த சீராய்வு மனு மீது மார்ச் 1-ந் தேதியன்று விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தேமுதிக மற்றும் விவசாயிகள் சங்கங்களின் மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்பட உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications