காவிரி: தமிழகத்துக்கு ஏமாற்றம்... தண்ணீர் கோரி மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 63 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கோரும் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 63 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கோரும் மனுவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இதுதொடர்பான விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

தமிழக அரசு வாதம்
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி காவிரி விவகாரம் தொடர்பான மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்டோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக அரசு கோரிக்கையை முன்வைத்தது.

எழுத்துப்பூர்வ விசாரணை
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை தெரிவிக்க பெறுவதற்காக உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

டெல்லியில் முகாம்
தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 63 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கோரி புதிய மனுவை தாக்கல் செய்வதற்காக தமிழக அரசைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் டெல்லியில் கடந்த சில தினங்களாக முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் அதுகுறித்து மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.

தமிழகத்துக்கு பின்னடைவு
இந்நிலையில் காவிரி நதி நீர் தொடர்பான இறுதி தீர்பபு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் புதிய மனுக்கள் எதையும் தாக்கல் செய்ய இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். இது தமிழகத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications