மூடநம்பிக்கைகளை புகுத்தும் டி.வி. நிகழ்ச்சிகள்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

இது தொடர்பாக ‘ஹிந்து ஜாக்ரிதி சமிதி' என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:
பத்திரிகைகளைக் கட்டுப்படுத்த இந்திய பிரஸ் கவுன்சில் இருப்பதைப் போல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்த எந்த ஒரு அரசுத் துறையும் இல்லை.
திரைப்படங்களைத் தணிக்கை செய்ய தணிக்கைக் குழு இருப்பதைப் போல ஒலி, ஒளி சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய எந்த அமைப்பும் இல்லை.
ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவிக்கும் இணையதளங்களை உடனடியாக தடை செய்வதைப்போல், டி.வி. நிகழ்ச்சிகளுக்கு உடனடி தடை விதிக்க மத்திய அரசிடம் போதிய சட்டம் இல்லை.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை வெளியிடும் டி.வி. சேனல்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் அலட்சியப் போக்கால் நிகழ்ச்சிகள் வரம்புகளை மீறுகின்றன. அதன் காரணமாக ஆதரவான செய்திகள் வெளியிட பணம் பெறும் நிகழ்வுகளும் (பெய்டு நியூஸ்), மிரட்டிப் பணம் பெறும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.
மூட நம்பிக்கை, தவறான வழிகாட்டுதல்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அவற்றைக் கண்காணித்து முறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொது நல மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டது.
இதனையடுத்து, இதற்கு பதிலளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பிரஸ் கவுன்சில், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தொலைக்காட்சி கட்டுபாட்டு தனியார் அமைப்புகள் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications