வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நிறுத்தம்... தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு
டெல்லி : வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆதார் அட்டை பெற்று இருந்தால் தான் அரசின் மானியம் உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும் என்று மத்திய அரசின் நிறுவனங்கள் தெரிவித்து வந்தன.

ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தி பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், அதே நேரத்தில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில், அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. பொது வினியோக திட்டம், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் தவிர்த்து பிற நோக்கங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படக்கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் போலிகளை தவிர்ப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியிருந்தது. இதற்காக வீடு வீடாக ஆதார் எண்ணை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், இந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்க கூடாது எனவும் கேட்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications