பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு 6 நாட்கள் சிறை... உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ் 6 நாள் சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொழிலதிபர் ஒருவரிடம் காமெடி நடிகர் ராஜ்பால் யாதவ், பல லட்சம் ரூபாய் வாங்கி 'அடா பாடா லபாடா'(2012) படம் தயாரித்துள்ளார். அந்தப் படம் தோல்வியடைந்ததால் அவரால் பணத்தை திருப்பித் தர முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக தொழிலதிபர் எம்ஜி அகர்வால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார். அதில் 10 நாட்கள் ராஜ்பால் யாதவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பம் 2-ந் தேதி முதல் அதே டிசம்பர் 6-ந் தேதி வரை 4 நாட்கள் ராஜ்பால் யாதவ் சிறையில் இருந்தார். அந்த வழக்கில் மேல்முறையீடு செய்த ராஜ்பால் தண்டனைக்கு இடைக்காலத் தடை பெற்றார்.
இந்நிலையில், கடந்த ஜுன் 3-ந் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ராஜ்பால் யாதவ் மீதமுள்ள 6 நாட்கள் சிறை தண்டணையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ராஜ்பால் யதவ் ஜுலை 15-ந் தேதிக்குள் திகார் சிறையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் ராஜ்பால் யாதவ் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்பால் யாதவ் வாதத்தை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், 10 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. அவர் ஏற்கனவே 4 நாள் சிறையில் நிலையில், 6 நாள் சிறையில் இருக்க வேண்டும் என்பதால், திகார் சிறைக்கு சென்று சரணடையும்படி அறிவுறுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications