மருத்துவ பொது நுழைவு தேர்வை ரத்து செய்த தீர்ப்பு மறு ஆய்வு: உச்ச நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

SC to review ex-CJI’s ruling on medical test
டெல்லி: மருத்துவ கல்லூரி பொது நுழைவு தேர்வை ரத்து செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கோரி, மத்திய அரசு மற்றும் மற்றும் பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், நீதிபதிகள் எச்.எல்.தத்து, ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித்சென் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீர்ப்பை மறு பரிசீலனை செய்வதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், அது குறித்து அனைத்து தனியார் மற்றும் சிறுபான்மையோர் நிறுவன கல்லூரிகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் நீதிபதி விக்ரம்ஜித் சென் இருவரும் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய ஆதரவாகவும், மற்றொரு நீதிபதியான ஏ.ஆர்.தவே, பொது நுழைவுத்தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+