ராஜீவ் கொலையாளிகள் விடுதலை வழக்கு.. 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ஆர்.எல். லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் இன்று விசாரணையைத் தொடங்கியது.
இந்த அமர்விற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமை வகிக்கிறார். இக்குழுவில், நீதிபதிகள் கேஹர், சிக்ரி, சலமேஸ்வர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜீ்வ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களான முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் மேலும் நான்கு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.
ஆனால் அதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இப்படி விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்று அது வாதிட்டது. மேலும் இதுபோன்ற வழக்கை சாதாரண பெஞ்ச் விசாரித்தது சரியல்ல, இதை அரசியல் சாசன பெஞ்ச்தான் விசாரிக்க வேண்டும் என்றும் அது கோரியிருந்தது.
இதையடுத்து இந்த வழக்க அரசியல் சாசன அமர்வு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று இந்த விசாரணையை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.












Click it and Unblock the Notifications