எதற்கெல்லாம் ஆதார் அட்டை தேவை?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆதார் அட்டையை எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம்... எந்தெந்த விஷயங்களில் அந்த அட்டை அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.
ஆதார் அட்டை தேவையா இல்லையா என்ற வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு முன் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, சி.நாகப்பன் ஆகியோர் இடைக்கால உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தார்கள்.

அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:
- அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. இதுபற்றி மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வழியாகவும் விளம்பரப்படுத்த வேண்டும்.
- பொது வினியோக திட்டம் (ரேஷன்), மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் தவிர்த்து பிற நோக்கங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படக்கூடாது.
- பொது வினியோகத் திட்டம், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கூட இந்த ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது.
- ஆதார் அட்டைக்காக பதிவு செய்கிற தகவல்களை குற்ற வழக்கு விசாரணை தவிர்த்து பிற எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அதையும் நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும்.
அதே நேரம், ஆதார் அட்டை வழங்குவதற்கு தகவல்கள் பதிவு செய்கிற நடவடிக்கையை நிறுத்திவைத்து உத்தரவிட வேண்டும் என்ற வழக்குதாரர்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications