ஹரியானாவை இழக்கும் பாஜக? காங்கிரஸுக்கு பெருகும் தலித் மக்கள் ஆதரவு.. ஆஹா ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்
சண்டிகர்: ஹரியானாவில் உள்ள 90 சீட்களுக்கும் ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு எஸ்சி மக்களின் ஆதரவு மெல்ல பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளது. இதைத் தக்க வைக்கும் பட்சத்தில் அங்குக் காங்கிரஸின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சீட்கள் உள்ள நிலையில், அங்கு ஒரே கட்டமாக வரும் அக். 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக & காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

களம் எப்படி: ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்குக் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாஜகவே ஆட்சியில் இருக்கிறது. லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தல் என அனைத்திலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வந்துள்ளது. அதிகபட்சமாகக் கடந்த 2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு 58.2% வாக்குகள் கிடைத்தன. 2019இல் பாஜகவுக்கு இங்கு எந்தளவுக்கு ஆதரவு இருந்தது என்பதையே இது காட்டுகிறது.
இது அந்தத் தேர்தலில் ஹிந்தி ஹார்ட்லேண்ட் பகுதியில் பாஜக பெற்ற வாக்குகளுடன் ஒத்த போய் இருந்தது. அப்போது ஹிந்தி ஹார்ட் லேண்ட் பகுதியில் பாஜக 53.88% வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கணக்குப்படி பார்த்தால் அடுத்து சில மாதங்களில் நடந்த ஹரியானா சட்டசபைத் தேர்தலில் பாஜக 90இல் 79இல் வென்றிருக்க வேண்டும்.
பிராந்திய கட்சிகள்: ஆனால், அந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 36.5% ஆகக் குறைந்தது. பாஜகவால் வெறும் 40 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதேநேரம் இந்த வாக்குகள் காங்கிரஸுக்கும் செல்லவில்லை. அது ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் இந்தியத் தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) போன்ற பிராந்தியக் கட்சிகளுக்குச் சென்றன. இதுவே அங்குக் கூட்டணி ஆட்சி அமையக் காரணமாக இருந்துவிட்டது.
மாறும் அரசியல் களம்: இந்த முறை லோக்சபா தேர்தல் சமயத்திலேயே பாஜகவுக்குப் பிரச்சினை இருந்தது. கூட்டணியில் இருந்த ஜேஜேபி விலகிவிட்டது. இதனால் முதல்வர் பதவியில் இருந்த மூத்த தலைவர் மனோகர் லால் கட்டரை கூட மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக தள்ளப்பட்டது. அப்போதும் பாஜகவால் 10இல் 5 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த முறை பாஜக 46.1% வாக்குகளைப் பெற்றது. அதேநேரம் இந்த முறை மற்ற வாக்குகள் பிராந்திய கட்சிகளுக்குச் செல்லவில்லை நேராகக் காங்கிரஸுக்கே சென்றது.
இதன் காரணமாகவே 5 சீட்களில் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்துள்ளது. அதிலும் குறிப்பாக எஸ்சி வாக்குகள் பாஜகவுக்கு அதிகம் வந்துள்ளதாம். ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சீட்களில் 17 சீட்கள் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்குக் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதுவே ஹரியானா மாநிலத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும் எனத் தெரிகிறது. விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை கையாண்ட விதம் ஆகியவை தலித் மக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலக காாரணமாக இருக்கிறது.
காங்கிரஸுக்கு சாதகம்: மேலும், பிராந்திய கட்சிகளான ஜேஜேபி மற்றும் ஐஎன்எல்டி ஆகிய இரண்டும் விவசாய ஜாட் சமூகத்தை நம்பியே அரசியலில் களமிறங்குகிறது. பாஜகவைப் பொறுத்தவரை ஜாட் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைத் தன்வசப்படுத்த முயல்கிறது. பூபேந்தர் ஹூடாவின் தலைமையில் அங்குக் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்வதால் ஜாட் சமூகத்தினர் வாக்கு காங்கிரஸ் பக்கமும் வரும்.
கடந்த 2019 சட்டசபை தேர்தலில் பாஜகவில் குறைந்த வாக்குகள் பிராந்திய கட்சிகளுக்கு சென்றன. ஆனால், இந்த முறை அது காங்கிரஸ் கட்சிக்கே வரும் என தெரிகிறது. மேலும், 2024 லோக்சபா தேர்தலில் பெற்ற தலித் வாக்குகளைக் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டால் ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி மாலை சூடும்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications