தமிழகத்துக்கு அக்.7 முதல் அக்.18 வரை வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: தமிழகத்துக்கு அக்டோபர் 7-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் அதை மதிக்கவில்லை கர்நாடகா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிரான மத்திய அரசின் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா ஒப்புதல் தெரிவித்தது.
இதையடுத்து அக்டோபர் 7 முதல் 18-ந் தேதி வரை எவ்வளவு நீரை கர்நாடகாவால் திறந்துவிட முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யுயு லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு அக்டோபர் 7-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தமிழகம், கர்நாடகா அணைகளை மேற்பார்வைக் குழு பார்வையிட்டு வரும் அக்டோபர் 17-ந் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications