காவிரி வழக்கில் இனி யாரும் 15 வருடங்களுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட் தடாலடி
Recommended Video

டெல்லி: காவிரி வழக்கில் இனி மேல்முறையீடு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழகத்திற்கான நீரில் அளவு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு 177.2 டிஎம்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு இதே அளவு தண்ணீர் அதிகம் கிடைக்கப்போகிறது.

அதேநேரம், இந்த உத்தரவு அடுத்த 15 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்றும் பின்னர், அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு பரிசீலிக்கலாம் என கூறியுள்ளதன் மூலம், உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், காவிரி தொடர்பான, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து இதன் மூலம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் அளித்த இந்த தீர்ப்பை எதிர்க்கும் சீராய்வு மனுக்களுக்கு பெரும் முக்கியத்துவம் கிடைக்காது என்பதே சட்ட வல்லுநர்கள் பார்வையாக உள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட காவிரி நதிநீர் தொடர்பான, 1892, 1924ம் ஆண்டு ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே தமிழக அனுமதியின்றி புதிதாக கர்நாடகாவில் அணை கட்ட முடியாது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications