போன் பேச விடாததால் தற்கொலை முயற்சி.. லெட்டர் எழுதிவிட்டு 1,400 கிமீ தூரம் போன 10ம் வகுப்பு சிறுமி!
10ம் வகுப்பு சிறுமி ஒருவர் போன் பேச விடாததால் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார்.
Recommended Video

போபால்: 10ம் வகுப்பு சிறுமி ஒருவர் போன் பேச விடாததால் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார். அவளது அம்மா அவளின் போனை வாங்கி வைத்துக் கொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதற்காக அவர் 1,400 கிமீ தூரம் பயணம் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியிலும், அந்த சிறுமியின் பள்ளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் அந்த பெண்ணை 24 மணி நேரமாக தேடினார்கள். அந்த பெண் கிடைத்ததே ஆச்சர்யமான நிகழ்வாகும்.

நடந்தது என்ன
அந்த சிறுமி அதிக நேரம் போனில் பேசிக் கொண்டு இருந்ததால் அம்மாவால் கண்டிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் போனை வாங்கி அதில் இருந்த சிம் கார்டை தூக்கி எறிந்துள்ளார். இதனால் அந்த சிறுமி மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

தற்கொலை கடிதம்
இதற்காக தற்கொலை கடிதம் எழுதியுள்ளார். அதில் ''எனக்கு வாழ பிடிக்கவில்லை. இந்த கடிதத்தை நீங்கள் படிக்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். தங்கச்சியை ஐபிஎஸ் படிக்க வையுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். பின் போபாலில் இருந்து எதோ இடம் தெரியாத ரயில் பிடித்து 1400 கிமீ வரை சென்றுள்ளார்.

தேடல்
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கடந்த 24 மணி நேரமாக அந்த சிறுமியை தேடி இருக்கிறார்கள். ஆனால் அந்த சிறுமி குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அந்த சிறுமி போன் செய்துள்ளார்.

திரும்பி வந்தார்
ரயிலில் ஒருவரிடம் போன் வாங்கி அந்த சிறுமியா பேசியுள்ளார். அப்போதுதான் அவள் 1,400 கிமீ தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இருப்பது தெரிய வந்தது. பயமாக இருக்கிறது என்று புலம்பி உள்ளார். இதையடுத்து போலீசால் கடைசி நேரத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டு இருக்கிறாள்.












Click it and Unblock the Notifications