5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர், கிளர்க் கைது
Recommended Video

பாட்னா: பாட்னாவில் 5ம் வகுப்பு மாணவியை 9 மாதங்களாக பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர் மற்றும் கிளர்க்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷரீப் பகுதியில் இருக்கும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி புதன்கிழமை வீட்டிற்கு வந்ததும் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளார். பெற்றோர் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விளக்கம் கேட்டனர். பள்ளி முதல்வரும், கிளர்க்கும் சேர்ந்து கடந்த 9 மாதங்களாக தன்னை மிரட்டி கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக சிறுமி தெரிவித்தார்.
அந்த கொடூர சம்பவத்தை கிளர்க் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
வீட்டு பாடத்தை சரி பார்க்கிறேன் என்ற பெயரில் மாணவியை தனது அறைக்கு அழைத்து முதல்வர் பலாத்காரம் செய்துள்ளார். அதில் இருந்து 9 மாதங்களாக சிறுமியை சீரழித்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி முதல்வர், கிளர்க்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications