தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு, கைது
மாணவரை பிரம்பால் அடித்து, காலால் எட்டி உதைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் குமரனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியர் அடித்து, உதைப்பதாகக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று பள்ளி வளாகத்தில் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது குமரன் உட்பட சில மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் இருப்பதைக் கண்ட தலைமை ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் அவர்கள் வகுப்பு ஆசிரியரிடம் அழைத்துவந்து விட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வகுப்பு ஆசிரியர் மாணவர்களை கண்டித்து அடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதில் குமரன் என்ற மாணவரை அடித்து காலால் உதைக்கும் போது அதை வகுப்பிலிருந்த சக மாணவர்களில் ஒருவர் அலைபேசியில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆசிரியர் தாக்கியதால் காயமடைந்ததாக கூறி குமரனை சக மாணவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தலித் சமூகத்தை சேர்ந்தவர்
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த என்பதால் இதுபற்றி தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செல்வபாண்டி, சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் சத்யன் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பள்ளி வகுப்புக்கு வராத மாணவர்கள் சிலரை இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் தாக்கியதும், அதில் ஒரு மாணவரை பிரம்பாலும், காலாலும் தாக்கும்போது சக மாணவர் ஒருவர் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
- அருணாசலப்பிரதேசத்தை சீனா ஏன் 'தெற்கு திபெத்' என்று சொல்கிறது?
- அ.தி.மு.கவை முந்திய காங்கிரஸ், வி.சி.க - கைவிட்ட கிராமப்புற வாக்குகள்
இதுபற்றி தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவனிடம் விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனிடம் அதிகாரிகள் குழுவினரும் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து மாணவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாணவனை வகுப்பறையில் தாக்கிய இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது சிறார் வதை சட்டம், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகர போலீசார் ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் ஆசிரியரை சிதம்பரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் முன்னிறுத்தினர். நடுவர் உத்தரவை அடுத்து அவர் சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியரிடம், நீதிமன்ற அனுமதி பெற்று உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர் தற்போது நலமுடன் உள்ளார்," என்றார்.
பிற செய்திகள்:
- ஒருபாலுறவு முதல் முஸ்லிம் வரை: விதிகளை உடைத்த 5 சூப்பர் ஹீரோக்கள்
- தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
- அ.தி.மு.கவை முந்திய காங்கிரஸ், வி.சி.க - கைவிட்ட கிராமப்புற வாக்குகள்
- இந்து - முஸ்லிம் பிரச்னை, விவசாயிகள் மரணம்: உ.பி தேர்தலில் எதிரொலிப்பது எது?
- கோவிட் தொற்று சந்தேகத்தால் கொல்லப்பட்ட நாய்கள்: எஜமானர் கண்ணீர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!














Click it and Unblock the Notifications