இயல்பு நிலைக்கு திரும்பும் ஜம்மு காஷ்மீர்.. பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை மீண்டும் திறப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும், திங்கள்கிழமை முதல் கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் இன்று தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கான, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. படிப்படியாக இப்போது அந்த கட்டுப்பாடுகளை அரசு, தளர்த்த ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பொதுப் போக்குவரத்து விரைவில் செயல்படும் என்றும், வெள்ளிக்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் செயல்படுவதாகவும் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
ஸ்ரீநகரின் பெரும்பாலான பகுதிகளில் லேன்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் சனிக்கிழமை முதல் செயல்பட ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற பகுதிகளில் தகவல்தொடர்பு இருட்டடிப்பு இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது, ஆனால் லேண்ட்லைன் இணைப்புகள் ஒரு கட்டமாக செயல்பட முடியும்.

இதற்கிடையில், ஆளுநர் சத்ய பால் மாலிக், ஸ்ரீநகரில் உள்ள குடிமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர் மாலிக் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு சூழ்நிலையை ஆய்வு செய்த பின்னர், இந்த முடிவுக்கு வந்துள்ளார். குறிப்பாக, மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களை உறுதிசெய்த பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்த முன்வந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பாகிஸ்தானின் தூண்டுதலால் கல்வீச்சு சம்பவங்கள் ஏதேனும் நடக்குமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் இன்று அப்படி எதுவும் நடைபெறவில்லை. எனவே கெடுபிடிகளை தளர்த்திவிடலாம் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளதாக தெரிகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களும் ஆகஸ்ட் 5 முதல் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்க்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications