'தில்' இருந்தால் சுவிஸ் பேங்கில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்க: மோடிக்கு சிவசேனா சவால்
மும்பை: பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருந்தால் இந்தியர்களின் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வங்கிகளில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டியது தானே என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மோடிக்கு சவால் விட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

துணிச்சல்
உங்களுக்கு துணிச்சல் இருந்தால் இந்தியர்களின் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வங்கிகளில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டியது தானே. அந்த கறுப்பு பணத்தை கொண்டு வாருங்கள்.

நம்பிக்கை
மக்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்(மோடி). அவர்களின் நம்பிக்கையை கெடுக்க வேண்டாம். இல்லை எனில் மக்கள் உங்களுக்கு எதிராக நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் தாக்கத்தை பார்ப்பீர்கள்.

டார்ச்சர்
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளோம். ஆனால் அதை மக்களை கஷ்டப்படுத்தி செய்ய வேண்டாம். புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு இல்லாமல் இருப்பது மக்களுக்கு டார்ச்சராக உள்ளது.

பழைய நோட்டுகள்
மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை பழைய நோட்டுகளை கொண்டு செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் மக்களுக்கு மேலும் துன்பம் தான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications