ஜம்மு காஷ்மீர்: தப்புமா பாஜக? 26 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் காரணமாக அம்மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதாலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின்னர் நடக்கும் வாக்குப்பதிவு என்பதாலும், இந்த சட்டப்பேரவை தேர்தல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த 18ம் தேதி 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 61.11% வாக்குகள் பதிவானது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், 25.78 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தோ்தலுக்காக, 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில், முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் அப்னி கட்சியின் தலைவர் அல்தாப் புகாரி என பல முக்கிய தலைகள் களமிறங்குகின்றன.
ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளுக்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் புட்காம், ஸ்ரீநகர் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் நேற்று முன்தினத்துடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த தேர்தல் மற்ற கட்சிகளை விட பாஜகவுக்கு மிகுந்த நெருக்கடி மிக்கதாக பார்க்கப்படுகிறது. ஜம்மு பிராந்தியத்தில் நிறுத்தப்பட்ட பாஜக வேட்பாளர்களில் பாதிபேர் கூட வெற்றி பெறுவார்களா என சந்தேகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல, காஷ்மீர் பிராந்தியத்தில், மொத்தமுள்ள 47 தொகுதிகளில், பாஜக வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, தங்கள் கணிப்பு சரிதான் என்று அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கணித்திருக்கிறார்கள். எனவே ஜம்மு காஷ்மீரில் பாஜக தப்புமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications