டெல்லி சம்பவம் எதிரொலி: சென்னை வண்டலூர் பூங்காவில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு
சென்னை: நேற்று டெல்லி உயிரியல் பூங்காவில் பார்வையாளர் ஒருவரை வெள்ளைப் புலி ஒன்று கடித்துக் கொன்றதையடுத்து, சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது.
நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் நண்பர்களுடன் டெல்லி உயிரியல் பூங்காவைப் பார்வையிட வந்திருந்த மன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் எதிர்பாராத விதமாக வெள்ளைப் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் விழுந்தார்.
புலியைப் புகைப்படம் எடுப்பதற்காக முயர்சித்த போது, அம்மாணவர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. மற்ற பார்வையாளர்களின் முன்னிலையிலேயே அம்மாணவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்றது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குற்றச்சாட்டு...
பாதுகாவலர்கள் சரியான நேரத்திற்கு வராததும், தடுப்புச் சுவரின் உயரம் குறைவாக இருந்ததுமே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடுதல் பாதுகாப்பு...
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம். இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள மற்ற உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வண்டலூர் உயிரியல் பூங்கா...
அதன்படி, சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் விலங்குகளால் பார்வையாளர்களுக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் அதிக எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

பார்வையாளர்கள்...
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கும் வெள்ளைப் புலிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications