வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் அத்துமீறிய காவலாளி.. பெங்களூர் அப்பார்ட்மென்டில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் அப்பார்ட்மென்டில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த பெண்ணிடம் அக்குடியிருப்பு காவலாளி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர், பையப்பனஹள்ளி காவல் நிலைய எல்லையிலுள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் குடியிருப்பவர் கேரளாவை சேர்ந்த அந்த இளம் பெண். தனியார் நிறுவனம் ஒன்றில் மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.

பலாத்காரம்

சம்பத்தன்று இரவு அந்த அப்பார்மென்டில் அசாமை சேர்ந்த சிவா காவலாளியாக பணியாற்றியுள்ளார். அப்போது அப்பார்மென்டில் மின்சாரம் கட்டாகியுள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு வீடாக பாதுகாவலாளி சிவா சென்று மின் இணைப்பை சரி பார்த்துள்ளார். அப்போது வீட்டில், கேரள பெண் மட்டும் தனியாக இருந்ததை கவனித்த சிவாவுக்கு சபலம் தட்டியது.

இதையடுத்து, இரவு 11.45 மணியளவில் மீண்டும் அந்த பெண் வீட்டு கதவை தட்டியுள்ளார். மீண்டும் மின் இணைப்பை சரி பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண் வீட்டுக்குள் சிவாவை அனுமதித்தார்.

உடனேயே, எனக்கு ஒரு முத்தம் தா என கேட்டு ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ளார் சிவா. பயந்துபோன அந்த பெண், சிவாவை வெளியே பிடித்து தள்ள முயன்றார். ஆனால், சிவாவோ அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். மானபங்கம் செய்துள்ளார். உடைகளை கிழித்து எறிந்துள்ளார்.

அந்த பெண் தொடர்ந்து கத்தி கூச்சலிட்டதால் சிவா தப்பியோடிவிட்டார். மறுநாள் போலீசில் அப்பெண் அளித்த புகாரை தொடர்ந்து சிவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A security guard, a native of Assam, has been arrested and sent to jail molested a girl.
Please Wait while comments are loading...