மைசூரில் பையுடன் மோடியின் காருக்கு அருகே ஓடி வந்த நபரால் பதட்டம்
மைசூர்: மைசூரில் பிரதமர் நரேந்திர மோடியின் காருக்கு அருகே மோடி மோடி என்று கூறிக் கொண்டு ஓடி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மைசூருக்கு வந்துள்ளார். மைசூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஒன்றை முடித்துக் கொண்டு மோடி தனது காரில் லலித் மகால் ஹோட்டலுக்கு ஓய்வு எடுக்கச் சென்றார்.

அவரின் கார் வி.வி. சர்க்கிள் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் சாலையோரம் நின்றிருந்த நபர் ஒருவர் காருக்கு அருகே வந்து அதனுடன் ஓடத் தொடங்கினார். கையில் பை ஒன்றை வைத்திருந்த அவர் மோடி, மோடி என்று கூறிக் கொண்டே காருடன் ஓடி வந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரது பையில் என்ன இருந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து மோடி படை என்ற அமைப்பு பிரதமருக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி போராட்டம் நடத்தியது.
மைசூரில் இந்திய அறிவியல் மாநாட்டை மோடி இன்று துவங்கி வைத்தார். அவர் மாநாட்டில் கலந்து கொண்ட 15 ஆயிரம் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் உரையாற்றினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications