சினிமாவாகும் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு- பிரதமர் வேடத்தில் நடிகர் அனுபம் கெர்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. இதில் பிரதமர் வேடத்தில் நடிப்பவர் அனுபம் கெர்.
மும்பை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்படுகிறது. இதில் பிரதமர் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடிக்கிறார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்மோகன் சிங். இவர் 10 ஆண்டுகளாக அப்பதவியில் நீடித்தார்.

ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர்
இலங்கை தமிழர்கள் பிரச்சினை, பெட்ரோல் டீசல் விலையேற்றம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் ரப்பர் ஸ்டாம்ப் என்ற கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் மன்மோகன் சிங். பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்கள் வாழ்க்கையை சினிமா படமாக்கும் நிலை திரையுலகில் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற படங்கள் நன்றாக ஓடி வசூலையும் குவிக்கின்றன.

பிரபலங்கள்
டாக்டர் அம்பேத்கர், கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், டோனி, சச்சின் டெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், சந்தன கடத்தல் வீரப்பன், நடிகை சில்க் சுமிதா ஆகியோர் வாழ்க்கை வரலாறு சினிமா படங்களாக வந்துள்ளது. தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இவர் இந்தியாவின் 14-ஆவது பிரதமராக இருந்தார். 1991 முதல் 1996 வரை நரசிம்மராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தார். சிறந்த பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் செயல்பட்டார்.
|
அனைத்துமே...
மன்மோகன் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து அவரிடம் ஆலோசகராக பணியாற்றிய சஞ்சய்பாரு ‘த ஆக்சிடன்சியல் பிரைம் மினிஸ்டர்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் அடிப்படையில் மன்மோகன் சிங் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் மன்மோகன் சிங்கின் சிறுவயது வாழ்க்கை முதல் அரசியல் பிரவேசம், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரை அனைத்தும் இடம்பெறுகிறது.
|
அனுபம் கேர்
இந்த படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் 62 வயது அனுபம்கேர் நடிக்கிறார். படத்தை விஜய் ரத்னாகர் டைரக்ட் செய்கிறார். ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதுகிறார். இந்த படத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications