புல்லட் ரயில் வேனாங்க... இந்த ரயிலை சரி செய்யுங்க... வைரலாகும் வீடியோ
புல்லட் ரயில் எல்லாம் தங்களுக்கு வேண்டாம் என்றும் இதுபோன்ற மழைநீர் ஒழுகும் ரயிலை சரி செய்தாலே போதும் என்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி : புல்லட் ரயில் தொடங்குவதற்கு பதிலாக இதுபோன்று ஓட்டை உடைச்சலாக உள்ள ரயில்களை சரி செய்து கொடுத்தால் போதும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் அகமதாபாத் முதல் மும்பை இடையே இயக்குவதற்கான திட்டங்களை அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இதன் மூலம் பயண நேரம் குறைக்கப்படும் என்றும் கூறினார்.
புல்லட் ரயில் வேனாங்க... இந்த ரயிலை சரி செய்யுங்க... வைரலாகும் வீடியோ https://t.co/omvjhBIeRO pic.twitter.com/SIMpoYTwTb
— Oneindia Tamil (@thatsTamil) September 28, 2017
மேலும் ஜப்பான் நாட்டின் கடனுதவியுடன் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது. ஒரு ரயிலில் மழை நீர் ஒழுகி கொண்டிருக்கிறது. அதுவும் ஓட்டுநரின் அறையில் ஒழுகுகிறது. குடை பிடித்தபடியே ரயிலை இயக்கி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
மோடி ஜி அவர்களே எங்களுக்கு புல்லட் ரயிலெல்லாம் தேவை இல்லை. இது போன்ற ஓட்டை உடைச்சல் ரயில்களை சரி செய்தால் போதுமானது என்று கேட்டு கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications