அடடா.. ஜேம்ஸ் பாண்ட்டையே "ஏமாத்திட்டாங்களே"!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பான் பராக் விளம்பரத்தில் நடித்துள்ள முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் அதுகுறித்து அளித்துள்ள விளக்கம் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் செமையாக ஓட்டப்பட்டு வருகிறது.

அவர் பான் பஹர் என்ற பான் பராக் விளம்பரத்தில் நடித்துள்ளார். இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்து உலகப் புகழ் பெற்ற பிராஸ்னன், புற்றுநோய்க்கு வித்திடும் பான் பராக் விளம்பரத்தில்+ நடிக்கலாமா என்று பலரும் கேட்க ஆரம்பித்தனர்.

See how this '007' was 'cheated' by an Indian pan masala firm!

இதயடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர் 63 வயதான பிராஸ்னன். இந்த விவகாரம் குறித்து எனக்குத் தெரிய வந்தது. அதைக் கேள்விப்பட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். பான் பராக் விளம்பரத்தில் எனது படத்தை வைக்க அவர்களுக்கு நான் அனுமதி தரவில்லை.

உடனடியாக பான் பஹர் விளம்பரத்திலிருந்து எனது படங்களை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மவுத் பிரஷ்னர், டூத் ஒயிட்னர் என்றுதான் இதை நான் நினைத்தேன். அதற்காகத்தான் ஒப்பந்தமும் போடப்பட்டது.

See how this '007' was 'cheated' by an Indian pan masala firm!

பெண்களின் உடல் நலனுக்காக நீண்ட காலமாக நான் போராடி வருகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடி வருகிறேன். இப்படிப்பட்ட நிலையில் பான் பஹர் நிறுவனத்தின் செய்கை என்னை வருத்தமடையச் செய்துள்ளது.

யாருடைய நலனுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன். எனது மனைவியும், மகளும் புற்றுநோயால் மரணமடைந்தனர். அப்படிப்பட்ட நிலையில் நான் இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிப்பேனா என்று கேட்டுள்ளார் பிராஸ்னன்.

இருப்பினும் பான் பராக் என்று கூடவா தெரியாமல் நடிப்பார் "ஜேம்ஸ் பாண்ட்" என்று கேட்டு அவரை டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் கிண்டலடித்து வருகின்றனர். பான் பராக்குக்கும், டூத் ஒயிட்னருக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை.. அந்த லட்சணத்தில் இருக்கிறது "இங்கிலாந்து ரகசிய போலீஸ்" என்று ஒருவர் கிண்டிலடித்துள்ளார்.

அடடா... பான் பராக்கை டூத் ஒயிட்னர் என்று கூறி "ஜேம்ஸ் பாண்ட்"டையே ஏமாத்திருச்சே இந்த பான் பஹர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+