என் கையைப் பாருங்கள், ஆயுள் ரேகை நன்றாக இருக்கிறது.. கேஜ்ரிவால் தமாஷ்
டெல்லி: தனக்கு விஐபி பாதுகாப்பு தேவையில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
காரில் வாவ்.. வாவ்.. வாவ் என்று சைரன் ஒலிக்க, சிவப்பு விளக்கு சுழல வலம் வருவதெல்லாம் அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் செய்த அட்டகாசம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறுகையில், நமது நாட்டை விட்டு இந்த விஐபி கலாச்சாரத்தை அடித்து விரட்ட வேண்டும். அது நமது அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கடைப்பிடித்த அட்டகாசம் ஆகும். ஆங்கிலேயர்களே போய் விட்டனர். பிறகு எதற்கு அவர்கள் கடைப்பிடித்த பாரம்பரியத்தை மட்டும் நாம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

என்னைப் போலவே அனைத்து மாநில முதல்வர்களும் இந்த விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க முன்வர வேண்டும். அதேசமயம், இது தனிப்பட்டவர்களின் முடிவு சம்பந்தப்பட்டது. நான் போய் யாருக்கு அறிவுரை கூற முடியும். மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் பெரியவர்கள். அவர்களுக்கு நான் அறிவுரை கூற முடியாது.
எனது கையில் ஆயுள் ரேகை நன்றாக இருப்பதால் எனக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று நம்புகிறேன். எனவே எனக்கு பாதுகாப்பு என்று எதுவும் தேவையில்லை என்றும் கருதுகிறேன். நீங்களே என் உள்ளங்கையைப் பாருங்கள். தெரிந்து கொள்ளலாம்.
எனக்கு அதிகாரிகள் கொடுத்த பெரிய வீடுகளை நான் நிராகரித்து விட்டேன். சிறிய வீடுகளாகப் பாருங்கள் என்று கூறியுள்ளேன். பலர் என்னைத் தொடர்பு கொண்டு பெரிய வீட்டுக்குப் போவது சரியல்ல என்று கூறினர். அவர்களது நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பவில்லை. எனவே எனக்குத் தரப்பட்ட வீடுகளை நான் நிராகரித்து விட்டேன் என்றார் கேஜ்ரிவால்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications