துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்கையில் விபரீதம்: குண்டு பாய்ந்து 10ம் வகுப்பு மாணவர் படுகாயம்
பதன்கோட்: பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுவன் துப்பாக்கியை தனது நெற்றிப்பொட்டில் வைத்தபடி செல்ஃபி எடுக்கையில் குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள ஷிவ் நகரை சேர்ந்தவர் ரமன்தீப் சிங்(15). அவர் அப்பகுதியில் உள்ள குரு ஹர்கிஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரமன்தீப்பின் தந்தை குர்கிர்பால் சிங் தனது துப்பாக்கியை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார்.
Punjab: Pathankot boy seriously injured while taking a 'selfie' with a pistol pointing towards his head. pic.twitter.com/eh8RnDXLFt
— ANI (@ANI_news) April 30, 2016
இதை பார்த்த ரமன்தீப் அந்த துப்பாக்கியை எடுத்து தனது நெற்றிப்பொட்டில் வைத்தபடி தனது சகோதரியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார். தலையில் குண்டுபாய்ந்த ரமன்தீப்பை முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக லூதியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை செல்ஃபி எடுக்கையில் உலக அளவில் 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் 19 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications