மோடியுடன் 'செல்ஃபி' எடுக்க பாஜகவுக்கு ரூ.1 கோடி செலவு
டெல்லி: 'செல்ஃபி வித் மோடி' பிரச்சார திட்டத்தால் பாஜகவுக்கு ரூ.1 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அதனால் பலன் கிடைக்கவில்லை என்பதால் அப்பிரச்சார திட்டத்தை கைவிட பாஜக முடிவு செய்துள்ளது.
'செல்ஃபி வித் மோடி' என்ற பிரச்சார திட்டத்தை பாஜக கையில் எடுத்தது. மோடி போன்ற உருவத்தை ஆங்காங்குள்ள தேர்தல் அலுவலகங்களில் நிறுவி, அதனோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்பது இத்திட்ட நடைமுறை.

டெல்லியை தொடர்ந்து பீகாரிலும் இதேபோன்ற 'செல்ஃபி வித் மோடி' கொண்டுவர திட்டமிடப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தல்களின்போது 7 சுற்றுகளாக இத்திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், இதற்காக ரூ.1.06 கோடி செலவாகிருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவை வாக்குகளாக திசைதிரும்பவில்லை. எனவே பாஜக தோல்வியடைந்தது. அந்த விளம்பர திட்டம் ஒரு டைம்பாஸ் என்ற அளவில் கடந்து செல்லப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்துள்ள பாஜக 'செல்ஃபி வித் மோடி' விளம்பர திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளது. பீகாரிலும் அதை செயல்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications